அன்பு சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி ஒபரக்காத்துஹூ.
அல்லாஹூத்தஆலாவின் அனைத்து மகிமை நிறைந்த ஸலவாத்தும் ஸலாமும் நம்கண்மணி றஸூல்(ஸல்) அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார்-உத்தம ஸஹாபாக்கள்-இமாம்கள்-இறைநேசச்செ ல்வர்கள மற்றும் அனைத்து முஸ்லிம்கள் மீதும் என்றென்றும் நிலைக்குமாக....ஆமீன்.
நமது உயிரிலும் மேலான கண்மணி முஹம்மத் றஸூல் (ஸல்) அவர்களை இழித்தும் பழித்தும் பேசியும் எழுதியும் படம்எடுத்தும் தங்களின் இழிப்பிறப்பை எடுத்துக்காட்டிவரும் எஹூதி நஸாரா வெறியர்களை இந்த உலகம் எப்படி எதிர்த்து வெறுத்து ஒதுக்கி வந்துள்ளது வருகிறது என்பதை நேற்றைய இன்றைய வரலாறுகள் நமக்கெல்லாம் எடுத்துக்காட்டுகின்றன. ஆனால் அடையாளம் கண்டிடமுடியாத அளவுக்கு இன்றும் சில இத்தகைய இழிப்பிறப்புகளின் தோழர்கள் இஸ்லாத்தின் போர்வையில் இருக்கவும் செய்கிறார்கள் என்பதும் நாமெல்லாம் ஜீரணித்திட முடியாத-தயங்கும் உண்மைதான் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்
அல்லாஹூத்தஆலாவே 'உம்மை புகழில் உயர்த்தினோம்' என்று உம்மிநபி(ஸல்) உயர்வையும் புகழையும் தன் திருமறையில் திருவாய்மலந்திருக்க...அந்த பெருமானார்(ஸல்) அவர்களின் அருமையையும் அந்தஸ்தையும் அவ்வப்போது குறைத்துக்கூறி குறைகள்கூறி குப்ரில் குளிக்கும் குறுமதியுடைய முனாபிக்குகளும் முஸ்லிம்; என்ற போர்வையில் நம்மிடையே நடமாடத்தானே செய்கிறார்கள். நம்கண்;மணி நபி(ஸல்) அவர்களை இஸ்லாத்தில் ஒழிந்திருந்து இவர்கள் இப்படி இழிக்கவும் பழிக்கவும் செய்யும்போது... நம்சமுதாயத்தின் அர்த்தமற்ற மௌனம் ஆச்சரியத்தையே தந்தாலும். இந்த முனாபிக்குகள் இந்த உலகத்திலேயே அவச்சொற்களுக்கும் அவமானத்திற்கு ஆளாக்கப்படும் நிகழ்வுகளும் அரங்கேறித்தான் வருகின்றன. அல்ஹம்துலில்லாஹ்.
கண்மணி முஹம்மத்(ஸல்) அவர்களை அல்லாஹூவின் திருத்தூதராக-றஸூலாக இன்மொழி கூறி இதயத்து ஒளியாக ஏற்றுக்கொண்ட நாமெல்லாம் அல்லாஹூவின் அறிவுறுத்தலின்படி அண்ணல் நபி(ஸல்)அவர்கள் மீது அன்டாடம் அதிகமதிகம் ஸலாவாத்;துக்களை மொழிவதன் மூலம் அந்த அன்பினை அடையாளப்படுத்திக் காட்டிடவும் வேண்டும். இந்த உண்மைகளை எல்லாம் நமது கண்ணியத்திற்குரிய கோவை மௌலானா அப்துல் அஜீஸ் பாஜில் பாகவி அவர்கள் அழகுத்தமிழில் சில தலைப்புகளில் அருமையாக எடுத்துக்காட்டி எழுதியிருக்கிறார்கள். அவற்றை இத்துடன் அனைவரின் பார்வைக்காகவும் தொகுத்தளித்திருக்கிறேன்.
யூத கிருத்துவ வக்கிரப்படமும்
விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
கோவை மௌலானா அப்துல் அஜீஸ் பாஜில் பாகவி
செப்டம்பர் 11 நிகழ்வின் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்காவில் முஸ்லிம் விரோத கருத்துக்களும் இஸ்லாம் முஹம்மது நபி (ஸல்)அவர்களை இழிவு படுத்தும் செய்திகளும் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு அமெரிக்கா நாட்டின் கலிபோனியா மகானத்தை சேர்ந்த சாம் பாசைல் என்பவப் நபிகள் நாயகத்தை மிகவும் இழிவு படுத்தி திரைப்படம் தயாரித்துஅதன் 14 நிமிட முன்னோட்ட காட்சிகளை கடந்த ஜுலை மாதம் Youtube ல் வெளியிட்டுள்ளான். இவன் ஒரு யூதன்.
மிக மிக மோசமான திரைப்படம் அது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிக கீழ்த்தரமானவராக சித்தரிக்கப் பட்டிருக்கிறார். முஸ்லிம்களின் நாவினால் அந்த வார்த்தைகளை சொல்ல முடியாது. எந்த அளவிலும் நிலையிலும் மன்னிக்க முடியாத குற்றச் செயலாக இந்த திரைப்படம் அப்பட்டமாக பெருமானாரை கேவல்ப்படுத்துகிறது. இத்திரைப்படத்தை தயாரித்தவ்னுக்கு மட்டுமல்ல. இத்திரைப்படத்தில் நடித்த ஒவ்வொருவருக்கும் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். .படத்தைப் பார்க்க்கிற எந்த முஸ்லிமும் கொதித்துப் போவார். இதற்கு முன்னாள் வேறு யாரும் இந்த அளவு கேவலாமாக சித்தரித்திருக்கிற மாட்டார்கள் என்று கூறும் அளவுக்கு இப்படம் பெருமானரை கேவல்ப்படுத்துகிறது. முஸ்லிம்கள் தங்களது கண்டனத்தை கடுமையாக வெளிப்படுத்தியும் கூட யூ டூப் இப்படத்தை அகற்ற வில்லை. அது தொடர்ந்து முஸ்லிம்களிடையே ஆத்திரத்தையும் கோபத்தையும் பெருகச் செய்துள்ளது. அமெரிக்க அரசு தொடர்ந்து மத உணர்வுகளை புண்படுத்தி வருகிற பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் உட்பட எவரையும் கண்டிப்பதோ கைது செய்வதோ இல்லை. மாறாக கண்டு கொள்ளாமல் இருந்து விடுகிறது.உலகம் முழுவதிலிருந்து ம் இதற்கு எதிரான கணடனக்குரல்கள் எழுப்ப பப்பட்டு வருகின்றன.
மிக மிக மோசமான திரைப்படம் அது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிக கீழ்த்தரமானவராக சித்தரிக்கப் பட்டிருக்கிறார். முஸ்லிம்களின் நாவினால் அந்த வார்த்தைகளை சொல்ல முடியாது. எந்த அளவிலும் நிலையிலும் மன்னிக்க முடியாத குற்றச் செயலாக இந்த திரைப்படம் அப்பட்டமாக பெருமானாரை கேவல்ப்படுத்துகிறது. இத்திரைப்படத்தை தயாரித்தவ்னுக்கு மட்டுமல்ல. இத்திரைப்படத்தில் நடித்த ஒவ்வொருவருக்கும் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். .படத்தைப் பார்க்க்கிற எந்த முஸ்லிமும் கொதித்துப் போவார். இதற்கு முன்னாள் வேறு யாரும் இந்த அளவு கேவலாமாக சித்தரித்திருக்கிற மாட்டார்கள் என்று கூறும் அளவுக்கு இப்படம் பெருமானரை கேவல்ப்படுத்துகிறது. முஸ்லிம்கள் தங்களது கண்டனத்தை கடுமையாக வெளிப்படுத்தியும் கூட யூ டூப் இப்படத்தை அகற்ற வில்லை. அது தொடர்ந்து முஸ்லிம்களிடையே ஆத்திரத்தையும் கோபத்தையும் பெருகச் செய்துள்ளது. அமெரிக்க அரசு தொடர்ந்து மத உணர்வுகளை புண்படுத்தி வருகிற பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் உட்பட எவரையும் கண்டிப்பதோ கைது செய்வதோ இல்லை. மாறாக கண்டு கொள்ளாமல் இருந்து விடுகிறது.உலகம் முழுவதிலிருந்து ம் இதற்கு எதிரான கணடனக்குரல்கள் எழுப்ப பப்பட்டு வருகின்றன.
எகிப்தில் நடை பெற்ற கண்ட ஆர்ப்பாட்டம் பெரும் போராட்டமாக மாறியது. எகிப்து நாட்டினர் அயிரக்கணக்கானோர் அமெரிக்க தூரகத்தை (11-9-2012) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அமெரிக்க கொடிகளை கிழித்து போராட்ட காரர்கள் குற்றவாளிகளை கைது செய்யுமாறும் அந்த திரைப்படத்தை நீக்குமாறும் கோஷங்களைஎழுப்பினர். ஹிலாரி கிளிண்டன் நேற்று ஏகிப்தில் முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தை கண்டித்துள்ளார். போராட்டம் லிபியாவில் பரவியது. அங்குள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்ட மக்கள் கோபத்தில் தாக்கியதில் தூதரக ஊழியர் ஒருவர் பலியானார். அங்கிருந்து தப்பித்து பாதுகாப்பான இட்த்துக்கு சென்று கொண்டிருந்து லிபியாவிற்கான அமெரிக்க தூதர் ராக்கெட் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். அவருடன் தூதரக ஊழியர்கள் மூவரும் கொல்லப்பட்டுள்ளனர். இறந்து போன தனது நாட்டவரின் உடல்களை மீட்டு வருவதற்காக உடனடியாக விமானத்தை அனுப்பிய அமெரிக்க இதுவரை இத்தனைக்கும் காரணமாக இருந்த பத்தை பற்றி எதுவும் கூறவில்லை.
இந்தப் படம் இன்னஸெண்ட் முஸ்லிம்ஸ் என்ற பெயரில் இப்போதும் இருக்கிறது. பெருமானாரின் தோற்றத்தில் ஒருவனை நடிக்க வைத்திருப்பதோடு பெருமானாரை பெண் பித்தராகவும் சித்தரிக்கிறது. கெட்ட வார்த்தைகளும் பிரயோகிக்கப்பட்டுள்ளன. எந்த வகையிலும் அறிவுக்குப் பொருத்தமில்லாமல் வெறுப்பை மட்டுமே கொப்பளிக்கும் நோக்கில் இந்தப் படம் முட்டாள்தனமாக எடுக்கப் பட்டுள்ளது. முஸ்லிம்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களை தங்களது உயிரினும் மேலாக மதிப்பவர்கள். அவரது புகழ் மீது தூசு படிவதை கூட சகித்துக் கொள்ள மாட்டார்கள். கேரளாவில் ஒரு வன் பெருமானாரை கேலிச்சித்திரம் வரைந்த்தற்காக அவனது கை வெட்டப்படது. இப்படித்தான நடக்கும். இதை எல்லாம் தெரிந்து கொண்டே வேண்டு மென்றே முஸ்லிம்களை ஆத்திரப்படுத்துகிற நோக்கில் யூதச் சாத்தான் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளான். கிருத்துவ விஷமிகள் அதற்கு தூபம் போடுகின்றனர்.
முஸ்லிம்கள் தங்களது எதிர்ப்பையும் வேதனையையும் முறையாக உலகிறகு தெரியப்படுத்த வேண்டும். பெருமானாரின் வரலாற்றின் மீது சேறு வீசுகிற எந்த முயற்சியும் வெற்றி பெற்றதில்லை. அதனால் முஸ்லிம்கள் தங்களது எதிர்ப்பில் எச்சரிக்கையாக – தங்களுக்கே அது பாதகமாக தேவையற்ற உயிர் இழப்புக்களையும் பொருளாதார சேதங்களையும் உண்டு பண்ணி விடாமல் – கவனமாக நடந்து கொள்ள வேண்டும். இந்த ப்படம் உடனடியாக தடை செய்யப்ப்பட வேண்டும்.இந்தப் பட்த்தை வெளியிட்டவனுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.. இனி இது போன்ற அற்பத்தனமான வேலைகளில் யாரும் ஈடுபடாத வாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த பட்த்தை வெளியிட்ட யூடுப் நிறுவனத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப் பட வேண்டும்.
Jones, the Christian pastor in Florida, said that on Tuesday's anniversary of the Sept. 11, 2001, attacks on the World Trade Center and the Pentagon, he had released a video promoting a film that portrayed the Prophet in a "satirical" manner. Many Muslims consider any depiction of the Prophet offensive.
US media, including The Wall Street Journal, reported that the film at issue, entitled "Innocence of Muslims," was produced by an Israeli-American real estate developer, but had been promoted by Jones.
In Cairo, among about 2,000 protesters gathered in the Egyptian capital was Ismail Mahmoud, who, like others, did not name the film that angered him, but called on Mursi, Egypt's first civilian president, to take action.
"This movie must be banned immediately and an apology should be made," said the 19-year-old Mahmoud, a member of the "ultras" soccer supporters who played a big role in the uprising that brought down Hosni Mubarak last year.
செப்டம்பர் 11 இரட்டை கோபுரத் தாக்குதல் விவகாரத்தில் அமெரிக்க மக்களுக்கு கவலை இருக்கும் என்றால் அது நியாயமானது. அந்தக்கவலைக்கு மருந்து இப்படு ஒரு தாக்குதல் நடை பெறுகிற அளவிற்கு தங்களது நாடு எப்படி நடந்து கொள்கிறது - உலகம் முழுவதிலும் - என்று அவர்கள் யோசிக்கட்டும்.
ஹிரோஷிமாவில் நாகாசாகியில்ய்ம் குவாண்டமோ பேயிலும் இப்போது இராக் இராண் ஆபகானிஸ்தான் பாகிஸ்தான் அமெரிக்கா எப்படி நடந்து கொள்கிறது என்பதை அமெரிக்கா ஒரு நிமிடமாவது யோசித்துப் பார்த்தால் இந்த உலகில் தங்களை விட பெரிய அயோக்கியர்கள் கொலை காரர்ர்கள் திருட்டுப் பேர்வழிகள் தீய சக்திகள் தீவிரவாதிகள் வன்முறையாளர்கள் வேறு யாரும் இல்லை என்பதை உணர்வார்கள்;.
மிலாதுன் நபி என்பது இன்று முஸ்லிம்களின் ஒரு சிறப்பு நாளாக கருதப்படுகிறது. உண்மையில் அது உலக மக்களின் கவனத்திற்குரிய ஒரு நாளாகும். கி பி 571 ம் ஆண்டு ஏபரல் 20ம் தேதி மக்காவில் அநாதையாக பிறந்த முஹம்மது (ஸல்) அவர்கள் பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் ஏற்படுத்திய் தாக்கம் கற்பனைக்கு அப்பாற்பட்ட்து. இந்தஉலகில் மனித்ராகப் பிறந்த பிறக்கப் போகிற வேறு எந்த சக்தியும் எட்டிப் பிடிக்க முடியாதது. சமயம், , சமூகம், அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், வரலாறு, அறிவியல்,மொழி, தத்துவம், இலக்கணம், இலக்கியம், வாழ்வியல், உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அவருக்கு தீர்க்கமான ஒரு இடம் இருக்கிறது. மருத்துவம் கூட அவரிடமிருந்து கடன்பெற்றிருக்கிறது. இன்றும் நபிமருத்துவம் என்பது மக்களின் பிணி தீர்க்கும் ஒரு முறையாக இடம்பிடித்திருக்கிறது என்பது மட்டுமல்ல மனித உடல் ஆரோக்கியத்திற்கானஅவருடைய வழி காட்டுதல்கள் அனைத்து மருத்துவத்துறையிலும் மேற்கோள் காட்டப்படுபடுகின்றன. சட்டம், நீதி, நிர்வாகம் மற்றும் பதிவுத்துறைகளும் அவர் கோலோச்சுகிறதுறைகளாகும். அந்தப் பாலைவனச் செல்வர் விவசாயத்தையும் விட்டு வைக்கவில்லை.
மூன்றாம் உலகம் யுத்தம் ஒன்று வருமென்றால் அதற்கு தண்ணீர் தான் காரணமாக இருக்கப் போகிறது என ஐ நா மன்றம் எச்சரித்துள்ளது. நீர் பங்கீடு மற்றும் நீர்ப்பாசனம் குறித்துமுஹம்மது நபியின் வழிகாட்டுதல்கள் ஏற்றுக் கொள்ளப் படுமானால் அந்த அச்சத்திற்கு வழியே இருக்காது. இந்த துறைகளிலெல்லாம் முஹம்மது (ஸ்ல்) அறிவுரைகள், அல்லதுகருத்துக்களை கூறினார் என்று ஒற்றை வரியில் நகர்ந்து விட முடியாது. இத்துறைகள் அத்தனையும் அவர் பரிசோதனை முயற்சிகளை செய்து அதில் பெரும் வெற்றி கண்டார்என்று சொன்னால் அது கூட அவரை பற்றிய முழு அறிமுகமாகிவிடாது. தான் உருக்கொடுத்த அத்தனை சிந்தனைகளையும் வழிவழியாக பின் பற்றி நடக்கும் ஒரு சமூகத்தைஉருவாக்கிச் சென்றார், அந்த சமூகம் இன்றளவும் மட்டுமல்ல இனி உலகம் வாழும் காலம் வரையும் அவரது சிந்தனைகளை ஆலோசனைகளை உத்தரவுகளாக தலைமேற்கொண்டு செயல்படக் காத்திருக்கிறது என்று சொன்னால் மட்டுமே முஹம்மது (ஸல்) பற்றி சுருக்கமான அறிமுகம் முற்றுப் பெரும்.
அவர் மறைந்து இன்றும் அவரைப் பற்றியும் அவர் விட்டுச் சென்ற தத்துவங்கள் நடைமுறைகள் குறித்தும் விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதை பத்ரிகைகளும்தொலைக்காட்சிகளும் காட்சிப் படுத்திக் கொண்டிருக்கின்றன.
முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் உலகம் கொண்டாடும் மற்ற தலைவர்களுக்கும் இடையே மிக முக்கியமான ஒரு வித்தியாசம் இருக்கிறது. இயேசு. புத்தர், ஆதி சங்கரர்விவேகானந்தர், காந்தி, போன்ற பலரும் அனைத்து மக்களாலும் பாராட்டப்படுகிறவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவர்கள் இன்றைய நவ நாகரீகத்தின் அழுத்த்தைதாண்டி இவர்களை பின்பற்றுகிற ஆட்கள் உண்டா என்பதும் அப்படியே இருந்தாலும் அவர்களின் சதவீதம் எத்தனை என்பதும் கேளிவிக்குரியதாகும். முஹம்மது நபி (ஸல்)பாராட்டப் படுகிறவராக மட்டுமில்லாது இன்றளவும் கண்டங்கள் அத்தனையும் பின்பற்றப்படுகிறார் என்பதை கூர்ந்து யோசிக்க வேணும்.
இராக் நகரின் ஒரு வீதியில் திடகாத்திரமான ஒரு இளைஞனை முதியவர் ஒருவர் நியாயமின்றி அடிக்கிறார். அவன் அதை தடுக்காமலும் திருப்பி தாக்காலும் நிற்கிறான். ஏனென்றுகேட்டால் பெரியவர்களை மதிக்க்காதவர் என்னை சார்ந்தவர் அல்ல என்று முஹமது கூறியுள்ளார். நான் அந்த பழிக்கு ஆளாக விரும்பவில்லை என்கிறான். வாஷிங்டன்தெருக்களில் முகத்தை மறைத்த படி இளம் கல்லூரி மாணவி நடந்து கொண்டிருக்கிறாள். ஏன் இப்படி என்று கேட்டால். இது முஹம்மது நபியின் உத்தரவுஎன்கிறாள்.ஆஸ்திரேலியாவின் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஒரு சாக்லேட் வேண்டும் என்று சிறுவன் அடம் பிடிக்கிறான். அதை எடுத்துப் பார்த்த தந்தை இது ஹலால் அல்லஎன்கிறார். சிறுவனின் அழுகை நின்றுவிடுகிறது. என்ன என்று விசாரித்தால் முஹம்மது (ஸல்) என்று பெயர் சொல்லப் படுகிறது.சோவியத் ஆக்ரமித்த பால்டிக் நாடுகளில் ஒன்றில்ஒரு இளைஞன் தொழுகைகான அழைப்பு பாங்கு வாசகங்களை கூறுகிறான். காவலர்கள் அடித்து உதைக்கிறார்கள், அவன் பாங்கை நிறுத்தவில்லை. அவனைசிறையிடைக்கிறார்கள் அங்கும் அவன் பாங்கு சொல்வதை நிறுத்தவில்லை. சொல்லனா தொல்லகளுக்குப் பிறகும் அவன் பாங்கு சொல்கிறான், கிருக்கன் என்று கூறி அவனைவிடுதலை செய்கிறார்கள்.எதற்காக இப்படி என்று கேட்டால் முஹம்மது (ஸல்) கற்றுக் கொடுத்த அற்புதமல்லவா அது என்று அவன் பதிலளிக்கிறான்.
காஷ்மீரின் பனிப்பொழிவுகளின் அடர்த்திக்கு இடையேயும் மதுவின்றி வாழும் ஒரு சமுதாயம், வெட்கத்தை விலை பேசி விற்று விட்ட டென்மார்க்கிய நிர்வாணப் பிரதேசத்திலும்வரன்முறைக்கு உட்பட்டு வாழும் ஒரு சமுதாயம். பாரிஸ் நகரின் வீதிகளில் பர்தாக்களுக்களோடு உலாவருகிற ஒரு சமுதாயம். இன்றைய வால்ஸ்ட்ரீட்ளின் சாம்ராஜயத்தில்வட்டிக்கும் முறைய்யற்ற வர்த்தகங்களும் எதிராக எப்போதும் கொடிபிடித்துக் கொண்டிருக்கிற ஒரு சமுதாயம் அமரிக்க விமானங்களில் இன்னும் தாடிகளுடன் பயணம் செய்கிறஒரு சமுதாயம். நேட்டோ நாடுகளின் ஆக்ரமிப்பு குண்டு வீச்சுக்களுக்கு நடுவேயும் தொழுகைகாக துண்டுவிரிக்கிற ஒரு சமுதாயம், சர்வதேச அளவில், கருத்துச் சுதந்திரம் என்றபெயரில் அன்றாடம் அணுகுண்டுகளை வீசிக் கொண்டிருக்கிற ஊடகங்களை தாண்டி உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு சமுதாயம் முஹ்ம்மது என்ற பெயரை இன்னும்எத்தகைய உயிர்த்துடிப்போடு உச்சரித்துக் கொண்டிருக்கிறது என்பதை நியாயமாக யோசித்துப் பார்க்க வேண்டியது அறிவாளிகளின் கடமையாகும்.
இத்தகைய ஆகர்ஷணம் கொண்ட ஒரு சக்தி எத்தகைய சத்திய வெளிச்சத்திற்குரியது என்பதை அறிஞர்கள் அளவிட வேண்டும். அற்பத்தனமாக் குற்றச் சாட்டுக்களை அள்ளிவீசுவதை விட்டுவிட்டு அவர் விசயத்தில் நியாயாமான ஒரு பரிசீலனைக்கு மக்கள் தயாராக வேண்டும். முஹம்மது நபியை களங்கப்படுத்தும் முயற்சியை அணு அளவிலும்விட்டுவைக்காத முஸ்லிம் சமுதாயம் அவரைப் பற்றிய கருத்து விவாதங்களுக்கு எப்போதும் தயாராக இருக்கிறது.
ஒரு விவாதத்திற்கான ஜன்னலில் அந்த பேரொளியின் தரிசனம் உங்களுக்கு வாய்க்குமெனில் நீங்கள் அவரின் பக்கத்தில் ஒரு போராளியாக மாறிவிடுவீர்கள். அவரை தீவிரமாகஎதிர்தவர்கள் அந்த சத்திய தரிசனத்தை நேரிட்டுக் கணட நிமிடச் சருக்கில் சரணாகதி அடைந்தனர் என்பதுதான் வரலாறு. உமர் ஒரு உதாரணம் போதாதா? ஒரு கவிஞன்சொன்னது போல் முஹம்மது என்ற நன் மலரை வெட்ட வந்த விரல்களே அந்த மலருக்கு காம்பாக மறிவிடவில்லையா? எதிர்ப்பு எங்கே வலுவாக இருக்கிறதோ அங்கே பலமானதளத்தை அமைத்துக் கொண்ட்து தான் முஹம்மது நபியின் தனிச்சிறப்பு.
முஹம்மது நபி (ஸல்) தனது ஊர் மக்களிடம் “உங்களது உறவினன் நான். அந்தக் காரணத்தினாலேனும் என் வழியில் செல்ல என்னை அன்மதியுங்கள் என்று கோரிய போதுஅதைக் கூட ஏற்க மறுத்தனர் அம்மக்கள். ஆயினும் முஹம்மது நபி (ஸ்ல்) அவர்களது வாழ்வில் குற்றம் கண்டு பிடித்து அவரை தரம் தாழ்த்திட அவர்கள்முறசிக்கவில்லை.முஹம்மது (ஸல்) தனது பிரச்சாரத்தின் தொடக்க முயற்சியாக கஃபா ஆலயத்தின் அருகே இருந்த சபா குன்றின் மீதேறி சப்தமிட்டு “பஹ்ர் குடும்பமே! அதீகுடும்பமே! கஃபு குடும்பமே ! இந்த மலைகனவாயினூடே உங்களை தாக்குவதற்கு ஒரு படை வரப்ப்போகிறது என்று நான் சொன்னால் அதை நீங்கள் நம்பு வீர்களா? என்றுகேட்டார். அதற்கு அம்மக்கள் சொன்ன வார்த்தையை வரலாறு பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறது. “நஅம்! மா ஜர்ரப்னா அலைக்க இல்லா சித்கன்” ஆம்! நம்புவோம்! நீர்உண்மையாளர் என்பது தான் எங்களது அனுபவம்” என்று அம்மக்கள் கூறினர். தனது சொல்லை ஏற்கச் செய்வதற்கான பீடிகியை அமைத்துக் கொண்ட பிறகு முஹம்மது ஸல்)தனது பிரச்சாரத்தை எடுத்துரைத்த போது “இதற்குத்தானா எங்களை அழைத்தாய என்று கடிந்து கொண்ட அம்மக்கள் கடைசி வரை நபிகள் நாயகத்தின் நம்பகத் தன்மையில் குறைபேசவே இல்லை. வரலாற்றில் ஒரு பேரதிசயமாக முஹம்மது நபியின் பிரதான எதிரியாக இருந்த அபூஜஹ்ல் “ நீ பொய் சொல்கிறாய் என்று கூறமாட்டேன்! ஆனால் உன்னைஎன்னால் ஒத்துக் கொள்ள முடியாது. என்று நபிகள் நாயகத்திடம் கூறினான். முஹம்மது நபி வாழ்ந்த காலத்தில் அவரை சூழ்ந்திருந்த சமுதாயம் அவரது வாழ்வின் மீது எந்தப்பழிச் சொல்லையும் சொல்லவில்லை.
இறைத்த்தூதர்களைப் பற்றி அனுபவமின்மை காரணமாக மக்காவின் மக்கள் பெருமானாரைப் பற்றி, கவிஞராக இருப்பாரோ! மந்திரவாதியோ! ஒரு வேலை இதுவும் ஒரு வகைசித்த பிரமையே! என்றெல்லாம் பேச முற்பட்டார்கள் என்றாலும் அப்படிக் கூட அவர்களால உறுதியாக பேச முடியவில்லை. மக்காவின் செல்வாக்கு மிக்க செல்வந்தர் வலீது பின்முகீரா நபிகள் நாயகத்தை குறை சொல்லும் வார்த்தைய கண்டுபிடிப்பதற்காகவே தன்னுடைய வீட்டில் ஒரு ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். நபிகள் நாயகத்தின்எதிரிகள் ஒன்று கூடினர். “கவிஞர்” “மந்திரவாதி” “சித்தபிரமை பிடித்தவர்” என் ஒன்றன்பின் ஒன்றாக பழிச் சொற்கள் கூறப்பட்டன. வலீது அவை ஒவ்வொன்றையும் மறுத்தார்.முஹம்மது விடம் இந்தக் குறை இல்லை. இதை சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று அனைத்தையும் நிராகரித்தார்.. கருத்துச் சொன்னவர்கள்கடுப்படைந்தனர், நீங்களாவது ஒன்றை சொல்லுங்கள் என்றனர். வலீது சொன்னார். முஹம்மது விசயத்தில் நீங்கள் எதைச் சொன்னாலும் அது எடுபடாது. பொய்யென்று தெரிந்துவிடும். “மா அன் தும் பிகாயீலீன பிஸய்யின் பீஹி இல்லா உரிப அன்னஹூ பாதில்)
ஒரு உத்தமரை வார்த்தையால் ஊனப்படுத்தும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அல்ல. தங்கத்தை உரசிப் பார்த்த பொற்கொல்லனின் தீர்ப்பாக – முஹம்மது நபியின் யோக்கியதாம்சத்தை நிறுவும் சான்றாக அமைந்தது.தங்களது ஊர்கார்ரும் மரியாதையான குடும்பத்தவரும் நாணயமிக்கவருமான முஹம்மது (ஸல்) அவர்களை ஒன்று சேர்ந்துகொன்று விடலாம் என்று தீர்மாணித்தவர்கள் கூட முஹம்மது (ஸல்) வை பழிச் சொல்லுக்கு ஆளாக்கவில்லை.
ரோமப் பேரரசர்சர் ஹிர்கல் பாரசீகத்திடம் பெற்ற வெற்றிக்கு பரிகாரமாக பாலஸ்தீனத்திற்கு நடை பயணம் வந்திருந்த போது, அங்கு முஹம்மது நபியின் கடிதம் அவருக்குகிடைத்தது. முஹம்மது நபியை பற்றி விசாரிப்பதற்காக அவர் மக்காவிலிருந்து வந்திருக்கும் வியாபாரக் குழுவை அழைத்தார். மக்கத்து எதிர்களுக்கு நபிகள நாயகத்தை பழிதீர்க்கும் ஒரு முக்கிய வாய்ப்பு கிடைத்தது. அப்போதும் கூட அவர்கள் முஹம்மது ஸல் அவர்கள் மீது அவர்கள் பழி கூறி ஒரு வார்த்தை கூறவில்லை.
முஹம்மது என்றால் புகழுக்குரியவர் என்று பொருள், அந்த பொருளுக்கேற்பவே முஹம்மது (ஸல்) வாழ்ந்தார்கள்.
ஆனால் பெருமானாரின் வரலாற்றின் மீதும் களங்கத்தை பூசும் முயற்சியை ஐரோப்பிய கிருத்துவர்களே முதன் முதலாக ஆரம்பித்தனர். சிலுவை யுத்தங்களின் போது இந்தவகையான தூற்றுதல் பெருந்தூரலாக இருந்தது. தம் மனம் போனபடிக்கு நாயகத்தை பழித்துப் பேசினர். அவரைப் போர் வெறியர் என்றனர்- பெண்ணாசை கொண்டவர்,மோசடியாளர், என்றனர் சகிப்துத்தன்மை அற்றவர் என்றனர். அன்றிலிருந்து இன்றுவரை இந்த குற்ற இயல்புகளை அனைத்திற்கும் ஐரோப்பியர்களே பிறப்பிடமாக இருந்தனர்.கீழ்த்தரமான, ஒழுக்கக்கேடு நிறைந்த குரூரமான செயல்களுக்கு இன்று வரை ஐரோப்பிய கிருத்துவ மேற்குலகை தவிர வேறு உதாரணம் இல்லை. இன்னும் சொல்வதானால்உலகிற்கு கொடுப்பதற்கு அவர்களிடம் இவற்றை தவிர வேறு எதுவும் இல்லை. ஐரோப்பிய கிருத்துவர்கள் முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றிப் பேசிய கருத்துக்கள் பலவும்அவர்களுடைய மன விகாரத்தின் வெளிப்பாடாக அமைந்த்தே தவிர, அதில் ஆத்திரமும் பொறாமையும் பொங்கி வழிந்த்தே தவிர அதில உண்மை துளியும் இருக்கவில்லை.இஸ்லாமிற்கு எதிராக கிருத்துவர்களை திருப்புவதற்காக பெரும் பாலும் பாதிரிகளே இக்குற்றச் சாட்டுகளை கூறினார். அதனால் தான் அவர்கள் கூறிய குற்றச் சாட்டுக்கள் எதுவும்காலத்தின் காதுகளில் பதியவே இல்லை.
முஹம்மது நபியின் வரலாற்றின் வழக்கப் படி, அவருக்கு எதிரான் குற்றச் சாற்றுகளுக்கு எதிர் தரப்பிலிருந்தே மறுப்புச் சொல்லப் பட்டது. முஹம்மது நபிக்கு எதிரானகருத்துக்களை கருத்து ரீதியில் சந்தித்து நறுக்கான பதில்களை முஸ்லிம் சமூகம் முன்வைக்கத் தவறவில்லை. ஆனாலும் முஸ்லிம் அல்லாத பிற சிந்தனையாளர்களின்தளத்திலிருந்து தரப்பட்ட பதில்கள் முஹம்மது நபியின் வாழ்வில் சத்திய வெளிச்சத்திற்கு சான்றாக அமைந்தன.
முஹம்மது நபிக்காக வாதிட்டு முஸ்லிம்கள் கூறும் பதில்களில் சமய ரீதியான அணுகுமுறை மிகைத்து இருந்தது என்றால் பிற சிதனையாளர்களின் பதில்கள் முஸ்லிம்கள்சிந்திக்காத மற்றொரு கோணத்தில் வாழ்வியல் ரிதியான எதர்ர்த்தமான பதில்களாக அமைந்தன. “இதைக் கூடவா நீங்கள் கவனிக்கவில்லை” என் எதிர்ப்பாளர்களை நோக்கிகேள்வி கேட்கிற தொனியில் அவை அமைந்திருந்தன. மக்காவில் வலீது நட்த்திய கூட்டம் எப்படி நபிகள் நாயகத்தின் வரலாற்றுக்கு எதிர்திசையிலான புதிய பரிமாணத்தைதந்த்தோ அதே போல ஐரோப்பியர்களின் குற்றச் சாட்டுகளும் முஹம்மது நபியின் வாழ்வில எதிர்த்திசையிலான வலுப்படுத்தலாக அமைந்தன. அவை ஐரோப்பிய யூதகாழ்ப்புணர்வின் குரூரத்தை அம்பலப்படுத்தினவே அன்றி முஹம்மது நபி புகழ் வாழ்வில் ஒரு தூசு அளவுக்கு கூட மாசுபடுத்திடவில்லை.
19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய உலகில் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு எதிராக புயல் வீசிக் கொண்டிருந்த காலகட்டத்தில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற வீச்சு மிகுந்தசிந்தனையாளரும் அற்புதமான பேச்சாளருமான தாமஸ் Heroes and Hero-Worship என்ற தலைப்பில் உலகின் கதாநாயகர்களைப் பற்றி தொடர் உரைகள் நிகழ்த்தினார். எடின்பராபல்கலையில் சட்டம் பயின்ற அவரது உரைகளை மக்கள் கட்டணம் செலுத்திக் கேட்டனர். அவர் எழுதிய The Heroes என்ற நூலுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. கார்லைல் தனது உரைகளுக்கு கவிதை கதாநாயகர்க்களாக தாந்தே, ஷேக்ஸ்பியர் ஆகிய இருவரையும், கதாநாயக பாதிரியாராகக மார்டின் லூதரையும், கதாநாயக இலக்கியஎழுத்தாளராக ஜான்ஸனையும் ரூஸோவையும், ஆட்சியாளராக நெப்போலியனையும் தேர்வு செய்து அவர்கள் குறித்து ஆழமான கருத்துரைகளை வழங்கினார். 1840 ம் மே 8 ம்தேதி வெள்ளிக்கிழமை அன்று கதாநாயகர் – ஒரு தீர்க்க தரிசியாக என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது இந்த தலைப்பிற்கு தீர்க்க தரிசிகளின் பட்டியலிலிருந்து மோஸேவையோ இயேசுவையோ தேர்ந்தெடுக்காமல் யாரும் எதிர்பாரத விதமாக முஹம்மது (ஸல்) அவர்களை தேர்வு செய்தார்.
வெளையர்கள் கருப்பின மக்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை போல் அந்த கிருத்துவ சமுதாயம் முஹம்மது (ஸல்) அவர்களின் மீது வெறுப்புக் கொண்டிருந்த்து. தலைப்பேஅவர்களை திடுக்கிட வைத்தது என்றால் தொடர்ந்து அவர் பேசிய தகவல்களில் ஐரோப்பிய மக்களுக்கு பல அதிர்ச்சிகரமான உண்மைகள் காத்திருந்தன. “முஹம்மதுவுக்கு எந்தவேதச் செய்தியும் வரவில்லை என்று நையாண்டி பேசிய 17 ம் நூற்றாண்டைச் சார்ந்த Hugo Grotius என்ற டச்சு கவிஞனின் கருத்தை மறுத்து தன்னுடைய உரையை தொடங்கியகார்லைல், “It is a great shame for anyone to listen to the accusation that Islam is a lie and that Mohammad was a fabricator and a deceiver என்று தொடர்ந்தார்.
இஸ்லாம் பொய்யான ஒரு சமயம்; முஹம்மது ஒரு ஏமாற்றுக்காரர் என்று குற்றச் சாட்டை ஏறபது எந்த நாகரீகமான பிரஜைக்கும் வெட்கரமானது. என்ற அவரது தொடக்கம்நேயர்களை நிமிர்ந்து உட்கார வைத்தது, Hugo Grotius கற்பனையாகவும் கிறுக்குத்தனமாகவும் சொன்ன கதைகளில் கிருத்துவ உலகம் அகமகிழ்ந்து கொண்டிருந்த்து. முஹம்மதுசில புறாக்களை வளர்த்தார்,அந்தப் புறாக்களுக்கு அவர் நல்ல பயிற்சி கொடுத்தார்.அவை அவரது தோளில் வந்து உட்கார்ந்து அவரது காதோரம் வைக்கபடுகிற தானியங்களைசாப்பிடும், அதைதான் தனக்கு வஹி இறைச் செய்தி வருவதாக அவர் என முட்டாள்தனமாக கதை கட்டி விட்டிருந்தான். Hugo Grotius. இவன் மட்டுமல்ல கிருத்துவ உலகத்தைச்சார்ந்த புத்திசாலிகள்(?) பலரும் இப்படித்தான் உண்மைக்கு சற்றும் தொடர்பில்லாத அறிவீனமான கற்பனைகளை முஹம்மது (ஸல்) அவர்கள் விசயத்தில் நம்பியிம் பேசியும்வருகிறார்கள். இஸ்லாம் தொடர்பாக தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக் கொண்ட அறிவீனமான கருத்துக்களை நம்பி, பேசி, அதையே விவாதம் செய்து பரப்புவதன் மூலம்அற்பமாக சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த கிருத்துவர்கள் நிறைந்திருந்த அந்த திரளான சபையில் கார்லைல் உரத்துக் கூறினார். “இந்த மனிதர் விசயத்தில் இனவெறியோடுதிட்டமிட்டு நாம் உருவாக்கிய இந்தப் பொய்களால் நமக்குத்தான் இழிவே தவிர ஒருபோதும் அவருக்கல்ல.”
தொடர்ந்து நபிகள் நாயகம் (ஸல் அவர்களின் நாணயம், உள்ளத்தூயமை ஆகியவற்றை கிலாகித்துப் பேசிய கார்லைல், நபிகள் நாயகத்தின் ஒரு செயலை மிக உவப்போடுகுறிப்பிட்டார். முஹம்மது (ஸல்) ஒரு முறை மக்காவின் தலைவர்க்களுக்கு இஸ்லாமை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்த போது அங்கு வந்த ஏழை கண்தெரியாதவரானஅப்துல்லாஹ் பின் உம்மி மக்தி இடைமறித்து பேசினார். நபிகள் நாயகம் முகம் சுளித்தார். அப்போது அவ்வாறு செய்ய வேண்டாம் என்ற கருத்தில் “ பார்வையற்றவர் தேடி வந்தபோது முகம் கடுகடுத்தார் என்ற கருத்தில் இறைவசன் அருளப்பெற்றது. அதற்கு பிறகு அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) தன்னிடம் வருகிற போது அவரை “நான்கண்டிக்கப் பட காரணமாக இருந்தவரே வருக என பாசத்தோடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைப்பார்கள். பெருமானார் வெளியூர்களுக்குச் சென்ற நேரங்களில் இரண்டுமுறை அவரை மதீனா நகரின் பொறுப்பாளராக நியமித்தார்கள். இந்த இரண்டு நிகழ்வுகளை எடுத்துக் காட்டிய கார்லைல் “கதாநாயக தீர்க்கதரிசியின் உளத்தூயமையும் நேர்மையும்இந்த அளவுக்கு இருந்தன என்று கூறினார்.
நபிகள் நாயகத்தின் சத்தியத்தன்மையை எடுத்துக்காட்ட கார்லை அற்புதமான – உலக அனுபவத்தின் சத்தாக அமைந்த ஒரு நியதியை எடுத்துவைத்தார். “முஹம்மது ஒருஏமாற்றுக்கார்ராக இருந்திருந்தால் 12 நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கிற – 18 கோடி மக்கள் நிழல் பெறுகிற ஒரு சமயத்தை அவரால நிறுவி இருக்க முடியாது. சரியானஅடித்தளமில்லாத ஒரு கட்டிடம் சீக்கிரம் விழுந்து விடும். மோசடியை நீண்ட காலத்திற்கு மறைத்து வைக்க முடியாது. பொய் சீக்கிரமே வெளுத்து விடும்.”
ஐரோப்பிய சமுதாயம் மட்டுமே இன்று வரை பெருமானார் (ஸல்) அவர்களது திருமணங்களை கொச்சைப் படுத்தி வருகிறது. அவரை பெண்ணாசை கொண்டவராக சித்தரிக்கமுயல்கிறது. வெட்கங்கெட்ட வாழ்கையுடையோர் உயரிய ஒழுக்கம் சார்ந்த திருமண வாழ்வை குறைகூறுவது ஏற்புடையதல்ல. இருப்பினும், தாமஸ் கார்லைஐரோப்பியர்களுக்கு அன்றைய பாரசீக மன்னரான கிஸ்ராவின் ஆடம்பர வாழ்வையும் ரோமச் சக்ரவர்த்தியான கைஸைரின் டாம்பீகத்தையும் நினைவு படுத்திக் காட்டுகிறார்.வானத்தோடு தொடர்பு கொண்டிருந்த முஹமது (ஸல்) அவர்களுக்கு பூமியின் மன்னர்கள் சூடிக்கொள்ளும் மகுடங்களில் அக்கறையிருக்கவில்லை என்பதை விவரிக்கிறார்.
பெருமானாரின் சிற்றின்ப ஆசை அவரது திருமணங்களுக்கு காரணமல்ல என்பதை முஸ்லிம் அறிஞர்கள் பலவகையிலும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். முதல் மனைவி கதீஜா(ரலி) இறந்த பிறகே நபி (ஸல்) 10 திருமணங்களைச் செய்தார். அன்றைய அரபகத்தில் பல பெண்களை திருமணம் செய்வது சர்வசாதாரண வழக்மாக, குறை காணப்படாததாகஇருந்த்து. அப்படி இருந்தபோதும் அதுவரை ஒரு மனைவியுடனேயே வாழ்ந்தார்.
நபிகள் நாயகத்தின் 50 வயதுக்குப் பின்னரே இரண்டாவது திருமணம் நடைபெற்றது. மற்ற அதிகமான திருமணங்கள் ஹிஜ்ரி 5 க்குப்பின் நடைபெற்றன. அப்போது பெருமானார் 58வயதை கடந்து விட்டிருந்தார். இத்தனை திருமணங்களுக்குப் பிறகும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்த பல பெண்களை பெருமானார் நாசூக்காக ஏற்கமறுத்த்தை வரலாறு காட்டுகிறது. பெருமானாரின் மற்ற திருமணங்கள் ஒவ்வொன்றுக்கும் அரசியல் அல்லது சமூக அல்லது சமய நணமை ஒன்று காரணமாக இருந்தது.
பெருமானாரின் கடைசி மனைவி மைமூனா (ரலி). அவரை பெருமானார் திருமணம் செய்து கொண்ட்து முஸ்லிம்களுக்கு அரசியல் ரீதியாக பல நனமைகளை தந்தது.பிற்காலத்தில் இஸ்லாத்திற்கு மாபெரிய வெற்றிகளை வாரிக்குவித்த காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் அத்திருமணத்திற்கு பின்னரே இஸ்லாமை தழுவினார். அவருடன்மற்றொரு பிரபலமான அம்ரு பின் ஆஸ் (ரலி) இஸ்லாமைத் தழுவினர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) தன்னுடைய தோழர்களிடம் மக்கா தன்னுடைய ஈரல்துண்டுகளைநம்மிடம் வீசி விட்டது என்று கூறினார். இதற்கு ஒருவகையில் காரணமாக இருந்த மைமூனா அம்மையார் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் சித்தியாவார்.
தாமஸ் கார்லைல் மற்றவர்கள் யோசிக்காத புது வகையில் பெருமானார் (ஸல்) அவர்களின் புனித்ததை நிரூபிக்கிறார். “முஹ்ம்மது, அவர் மீது அக்கிரம்மாகவும் வரம்பு மீறியும்செல்லப் படுவது போல சிற்றிண்ப ஆசை கொண்டவரல்ல. எளிய உணவு எளிய இருப்பிடம் மற்ற அனைத்திலும் எளியதை கொண்டு திருப்தி கொள்ளும் ஒரு துறவியாக அவர்இருந்தார். பல மாதங்கள் பசியால வாடிய வாழ்க்கை அவருடையது”
சத்தான உணவு, கவர்ச்சியான ஆடைகள், வசதியான தங்குமிடம், வளமான பொருளாதாரம், கவலையற்ற வாழ்க்கை ஆகியவை சிற்றின்ப உல்லாச வாழ்க்கைகு மனிதனைதூண்டுபவை. இவை எதுவும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் கிடைக்கவில்லை என்பது எதார்த்தம்.முஹம்மது (ஸல்) தனது எதிரிகளை முழு வீரத்தோடு எதிர்த்துப்போராடி வெற்றி கண்டார் என்பதை ஐரோப்பிய கிருத்துவர்களால தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் முஹமது (ஸல்)பல யுத்தங்களுக்கு காரணமாக இருந்தார். வாள்முனையில் சமயத்தை பரப்பினார் எனப் புகார் கிளப்பினர். அவர் கற்றுக் கொடுத்த ஜிஹாத் என்ற சொல் மனித சமூகத்தின் நிம்மதியை குலைத்து விட்டதாக இப்போதும் சிலர்புலம்புகின்றனர். உயிர்ப்பலியை முஹம்மது (ஸல்) எவ்வளவு வெறுத்தார் ? அதை தடுப்பதற்க்கு அவர் மேற்கொண்ட முயற்சி என்ன? அவரது வரலாற்றை படித்தால் குறைந்தபட்சம் அவரது பொன்மொழித் தொகுப்பில் இருக்கிற ஜிஹாத் பற்றிய அத்தியாயத்தைப் படித்தால் புரிந்து கொள்ளலாம். நபிகள் நாயகத்தின் வாழ்வும் வாக்கும் திறந்த புத்தகமாகஎங்கும் கிடைக்கிறது.
ஒரு அரசியல் தலைவரின் முழு வாழ்வும் அப்பட்டமாக திறந்து காட்டப் படும் அதிசயம் முஹம்மது (ஸல்) அவர்களது வரலாறில் கிடைப்பது போல வேறு எங்கும்காணக்கிடைகாது. அந்தப் புனித வாழ்வில் மர்மத் திட்டங்கள் இல்லை, இரகசிய உத்தரவுகள் இல்லை. பொறி பறக்கும் விஷம் தோய்ந்த வார்த்தைகள் இல்லை. யுத்தம் என்பதுஒரு போராட்ட வாழ்வில் தவிர்க்க முடியாதது. சில சந்தர்ப்பங்களில் அது அவசியமானதும் கூட. அத்தகைய நிர்பந்த சந்தர்ப்பங்களிலேயே முஹம்மது (ஸல்) அவர்கள் யுத்தம்செய்தார்.
போர்க்களத்தில் அகிம்சையை வலுயுறுத்தி முதல் வரலாற்றுத் தலைவர் முஹம்மது (ஸல்) ஒருவராகத்தான் இருக முடியும். ஹிஜ்ரி 5 ல் நடைபெற்ற முரைசிஃ களத்தில்தோழர்களுக்கு அவர் சொன்னார். எதிர்களை சந்திக்க ஆசைப்படாதீர்கள்! இறைவனிடம் அமைதியை பிரார்த்தியுங்கள். எதிரிகளை சந்தித்தால் முந்திக் கொண்டு வாளைஉயர்த்தாதீர்கள். ஒருவேளை நீங்கள் தாமதிக்க அவர்கள் உங்கள் மீது வாள் வீசி விட்டால். அறிந்துகொள்ளுங்கள்! அந்த வாட்களின் நிழ்லில் உங்களது சொர்க்க காத்திருக்கிறது.இன்றைய முன்னேறிய உலகில் கூட போர் மரபுகள் கடை பிடிக்கப் படுவதில்லை. இராக்கில் நூற்றுக் கணக்கான பெணக்ளும் குழந்தைகளும் தங்கியிருந்த பதுங்கு குழியின்வாசலை குறி பார்த்து அமெரிக்கா ஏவுகணையை வீசியது. மற்றொரு தடவை ஈரான் நாட்டின் பயணிகள் விமானம் ஒன்றை ஏவுகணை வீசி அழித்தது.
முஹம்மது நபி உலகில் முதன் முறையாக போர் மரபுகளை சட்டமாக்கி அமுல் படுத்தியவர் ஆவார். பெண்கள், சிறுவர், முதியோர், சண்டைக்கு வராது ஆலயங்களிலிம், பதுங்குகுழுகளிலும் அடைக்கலம் தேடியிருப்பவர்களை கொல்லக் கூடாது. யாரிடமும் சண்டையிடுவதற்கு அவர்களிடம் நியாயம் பேச வேண்டும் என்பது மட்டுமல்ல. மரங்களைவெட்டக் கூடாது. விலை நிலங்களுக்கு தீ வைக்க கூடாது என்பதும் முஹம்மது (ஸல்) வரைந்து கொடுத்த போர் நியதிகளாகும். முஹம்மது (ஸல்) தன் வாழ்வில் 9 சண்டைகளைசந்தித்தார் என்பதை படிக்கிற நியாயவான்கள். அந்த சண்டைகளின் போது அவர் போட்ட உத்தரவுகளையும் அது கடைபிடிக்கப் பட்ட ஒழுங்கையும் சேர்ந்து கவனிக்கவேண்டும்.முஹம்மது (ஸல்) ஆயுதங்களின் வழியே சமயத்தை பரப்பினார் என்று புலம்புவோரைப் பார்த்து திலாஸி ஒலேரி கூறுகிறார். “ஆயுத பலத்தால் மக்களை இஸ்லாமைஏறக் முஹம்மது நிர்பந்தித்தர் என்பது சுத்தமான கற்பனையாகும். சிரிப்பை வரவழைக்க கூடியது. அது உணமையிலிருந்து வெகு தூரம் விலகிய ஆரோக்கியமற்ற வாதமாகும்.” (islam at the cross road By De Lacy O'Leary- london - 1923 )
முஹம்மது (ஸல்) அவர்களின் வரலாற்றை நியாயமாக எடை போடுகிற யாரும், ஓளிவு மறைவோ, சூதுவாதோ அற்ற அநத மகத்தான வாழ்வை மதிப்பாகவே கருதுவர். அதில்பிரமிக்கவே செய்வர். இது போல தூய வாழ்வு இன்னொன்று இல்லை என்று தாமாகவே கூறுவர். - ஜி.ஜி. கெல்லட் – கூறுவதை கேளுங்கள்! “ இஸ்லாத்தின்நிறுவனருடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில்ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது.”
முஹம்மது (ஸல்) அவர்களின் வரலாற்றை அவர் யார் என்ற எதார்த்தமான கேள்வியோடு வாசிக்கும் எவருக்கும் இந்த அனுபவச் சிலிர்ப்பு ஏற்படவே செய்யும். ஏனென்றால்அந்த வாழ்வில்:
· கருணைக்கு எதிரான ஒரு பார்வையில்லை
· நீதிக்கு எதிரான் ஒரு செயல் இல்லை
· ஒழுக்கத்திற்கு எதிரான் ஒரு அசைவில்லை
· பெண்களுக்கு எதிரான ஒரு ஒரு வசை இல்லை
· சிறுவர்களுக்கு எதிரான் ஒரு கடுப்பில்லை
· நேர்மைக்கு எதிரான ஒரு சூது இல்லை
· பொது நன்மைக்கு எதிரான் ஒரு சிந்தனை இல்லை
· சமத்துவத்திற்கு எதிரான ஒரு சமிக்ஞை இல்லை
· சகிப்புத்தன்மைக்கு எதிரான் ஒரு உத்தரவில்லை
· சிறுபான்மையினருக்கு எதிரான் ஒரு சூழ்ச்சி இல்லை
· மொத்தமாக சொல்வதானால்
· சத்தியத்திற்கு எதிரான ஒரு சொல் இல்லை.
துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், 'முஹம்மதுஒரு சரித்திர நாயகர்' என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்துமனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள். என்றார் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தில் புகழ்பெற்ற நூலாசிரியரான - எஸ். எச். லீடர் (-S.H. Leeder - Modern Sons of the Pharaohs)
ஹஜ்ஜுக்கு செல்ல மக்கள் தயாராகி வருகிறார்கள். ஹஜ்ஜு செய்ய நினைத்திருப்பவர்களுக்கு பொதுவாக சொல்லப்படுகிற ஒரு அறிவுரை “அதிகமாக சலவாத்து சொல்லிக் கொண்டிருங்கள் ”பள்ளிவாசலில் நுழைவதற்கு முன்னாள் சலவாத் ஓது வது போல ஹஜ்ஜுக்கு முன்னாலும்..
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ أَحَدُكُمْ الْمَسْجِدَ فَلْيُسَلِّمْ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ لِيَقُلْ اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ فَإِذَا خَرَجَ فَلْيَقُلْ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ – أبوداوود 393
இபாத்த்தில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள சலவாத்தை போல துணை செய்யக் கூடியது எதுவுமில்லை.
சலவாத்திற்கு ஏராளமான நன்மைகள் உண்டும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَلَّى عَلَيَّ وَاحِدَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ عَشْرًا – مسلم 616
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَوْلَى النَّاسِ بِي يَوْمَ الْقِيَامَةِ أَكْثَرُهُمْ عَلَيَّ صَلَاةً – ترمذي446 أ
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ ذَاتَ يَوْمٍ وَالْبِشْرُ يُرَى فِي وَجْهِهِ فَقَالَ إِنَّهُ جَاءَنِي جِبْرِيلُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَمَا يُرْضِيكَ يَا مُحَمَّدُ أَنْ لَا يُصَلِّيَ عَلَيْكَ أَحَدٌ مِنْ أُمَّتِكَ إِلَّا صَلَّيْتُ عَلَيْهِ عَشْرًا وَلَا يُسَلِّمَ عَلَيْكَ أَحَدٌ مِنْ أُمَّتِكَ إِلَّا سَلَّمْتُ عَلَيْهِ عَشْرًا – النسائي 1278
عن عبد الرحمن بن عوف - رضي الله عنه - قال : أتيت النبي وهو ساجد فأطال السجود قال :" أتاني جبريل قال : من صلى عليك صليت عليه ، ومن سلم عليك سلمت عليه فسجدت لله شكرًا "(رواه أحمد) .
عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَخِيلُ الَّذِي مَنْ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ – ترمذي3469
சில முக்கிய நன்மைகள்
· மறுக்கப் படாத பிரார்த்தனை
நம்முடைய வேறு எந்த வேண்டுகோளும் ஏற்கப்படவும் நிராகரிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. சலவாத் எப்போதும் ஏற்கப்படுகிறது. அது மறுக்கப் படாத பிரார்த்தனையாகும்.
· துஆ - மகபூல் ஆவதற்கு சலவாத்து
عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ إِنَّ الدُّعَاءَ مَوْقُوفٌ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَا يَصْعَدُ مِنْهُ شَيْءٌ حَتَّى تُصَلِّيَ عَلَى نَبِيِّكَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – ترمذي 448
அதனால தான் நாம் சலவாத்தில் தொடங்கி சலவாத்தில் நமது துஆ க்களை முடிக்கிறோம்.
பெருமானாரின் மீது சொல்லப்படுகிற சலவாத்துக்கள் அவர்களிடம் எடுத்துச் செல்லப்படுகிறது.சேர்ப்பிக்கப் படுகின்றன.
وعن عبد الله بن مسعود عن النبي - صلى الله عليه وسلم - قال : " إن لله ملائكة سياحين يبلغوني من أمتي السلام "(رواه النسائي والحاكم وصححه ووافقه الذهبي وقال الألباني : إسناده صحيح رجاله رجال الصحيح) .
عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ وَفِيهِ النَّفْخَةُ وَفِيهِ الصَّعْقَةُ فَأَكْثِرُوا عَلَيَّ مِنْ الصَّلَاةِ فِيهِ فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تُعْرَضُ صَلَاتُنَا عَلَيْكَ وَقَدْ أَرَمْتَ يَعْنِي بَلِيتَ فَقَالَ إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ - إبن ماجة -1075
சலவாத்துச் சொல்பவரின் பெயரும் அவருடைய தந்தை பெயரும் பெருமானாருக்கு தெரிவிக்கப்படுகிறது.
நமது சலவாத்திற்கு பெருமானார் பதில் சொல்கிறார்கள்.
சலவாத்தின் வேறு பல நனமைகள் - அபுஹூரைரா – ரலி
· மறந்ததை ஞபகப் படுத்த
· எதிரிகளை நண்பர்களாக்க
· எதிரிகளிடம் அச்சுறுத்தலை எற்படுத்த
சலவாத்தின் வேறு பல நனமைகள் - அலி ரலி:
அல்லாஹ்வின் நெருக்கமும் நிறைவும் – சலாத்தை போல் வேறு எதிலும் இல்லை –
தெளிந்த ஈமானுடன் நாம் செய்யும் நல்லமல்கள் அனைத்தையும் நாயன் அல்லாஹ் பொருந்தி என்றென்றும் நம்மனைவருக்கும் நல்லருள்புரிந்தருள்வானாகவும்.. .ஆமீன்.
ஸல்லல்லாஹூ அலா முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்- ஸல்அல்லாஹூ அலா முஹம்மத் யாரப்பி ஸல்லி அலைஹி வஸல்லிம்.
அன்புடனும் ஸலாமுடனும்,
முஹம்மத் ரஃபி